கொள்ளிடம் ஆற்றில் குளித்து கொண்டிருந்த 18 வயது இளைஞர் ஒன்று ஆற்றுக்குள் இழுத்து சென்றுள்ளது

by Editor / 27-11-2022 12:36:20pm
 கொள்ளிடம் ஆற்றில் குளித்து கொண்டிருந்த 18 வயது இளைஞர் ஒன்று ஆற்றுக்குள் இழுத்து சென்றுள்ளது

சிதம்பரம் அருகே வேலக்குடி பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்து கொண்டிருந்த 18 வயது இளைஞர் திருமலை என்பவரை முதலை ஒன்று ஆற்றுக்குள் இழுத்து சென்றுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீனவர்களுடன் இணைந்து திருமலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இளைஞர் திருமலை, சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via
Logo