தமிழ்நாட்டை குப்பை நாடாக மாற்றிக் கொண்டிருக்கும் தேர்தல் நாட்டை கண்டித்து பிரேமலதா அறிக்கை.

by Editor / 18-12-2024 09:46:59am
தமிழ்நாட்டை குப்பை நாடாக மாற்றிக் கொண்டிருக்கும் தேர்தல் நாட்டை கண்டித்து பிரேமலதா அறிக்கை.

தேமுதிக  பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டின் வளங்களான கனிம வளங்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு கேரளாவிற்கு கடத்திக் கொண்டிருக்கின்றனர், கேரளாவில் இருக்கின்ற கழிவு பொருட்களை அதாவது மருத்துவ கழிவுகள், குப்பைகள், எலக்ட்ரானிக் கழிவுகள், போன்றவற்றை தமிழ்நாட்டின் எல்லைகளின் டன் டன்னாக கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர், எல்லைகளை பாதுகாக்காமல் லஞ்சத்தை பெற்றுக்கொண்டு அவர்களை அனுமதித்து தமிழ்நாட்டை குப்பை நாடாக மாற்றிக் கொண்டிருக்கும் இந்த அரசின் செயல்கள் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் தலைகுனிவு. பக்கத்தில் இருக்கும் கேரளா எல்லா வளத்தோடும், நலத்தோடும் சிறப்பாக உள்ளது. அங்கே இருக்கு குப்பைகளை கொட்டுவதற்கு இங்கு யார் அனுமதி வழங்கினார்கள்..? அரசாங்கத்தின் அதிகாரிகள் சுங்கச்சாவடியில் பணியாற்றுபவர்கள் என்ன செய்கின்றனர்..? இந்த அளவிற்கு கேவலமான நிகழ்வுகள் தமிழகம் சுற்றி இருக்கின்ற எல்லா எல்லை பகுதிகளில் நடந்து கொண்டிருக்கின்றன. இதை தடுக்க வேண்டிய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது. இது மிக மிக ஒரு கண்டிக்கத்தக்க விஷயம். தமிழக மக்கள் சார்பாக உடனடியாக அந்த குப்பைகளை அகற்றி யார் அந்த குப்பைகளை கொட்டினார்கள் என்பதை கண்டறிந்து அவர்களின் நாட்டிற்கு அந்த குப்பைகளை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். இதை தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். தமிழ்நாட்டை குப்பை நாடாக மாற்றிய கேரளா அரசை கடுமையாக கண்டிக்கிறோம். என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags : தமிழ்நாட்டை குப்பை நாடாக மாற்றிக் கொண்டிருக்கும் தேர்தல் நாட்டை கண்டித்து பிரேமலதா அறிக்கை.

Share via