ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கனடியாக அதிகரிப்பு பரிசல் இயக்கவும் ஆற்றில் குளிக்கவும் 11 வது நாளாக தடை
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 55000 கனடியக இருந்த நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 70,000 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது இதனால் மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கவும் ஆற்றில் குளிப்பதற்கும் 11வது நாளாக தடை விதித்துள்ளது. மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags : ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கனடியாக அதிகரிப்பு பரிசல் இயக்கவும் ஆற்றில் குளிக்கவும் 11 வது நாளாக தடை