குடோனில் பயங்கர தீ விபத்து - ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்
சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் மோதி (வயது 50). இவர், கிழங்கு மாவு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு செவ்வாய்பேட்டை நரசிம்மசெட்டி ரோடு பகுதியில் கிழங்கு மாவுக்கு பயன்படுத்தப்படும் சாக்கு குடோன் உள்ளது. இந்த குடோனில் கிழங்கு மாவு மற்றும் பழைய சாக்குகளை வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு மோதி வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். பின்னர் நேற்று அதிகாலை 1. 30 மணிக்கு குடோனில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அந்த பகுதியில் கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக குடோன் உரிமையாளர் மோதிக்கும், செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாவு குடோனில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் வைத்திருந்ததால் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து அன்னதானப்பட்டி போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags :