சீனாவில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து.

by Staff / 02-05-2022 01:24:29pm
சீனாவில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து.

சாங்ஷா  நகரில் உள்ள ஆறு மாடிக் குடியிருப்பு கட்டிடம் கடந்த 29ஆம் தேதி மதியம் திடீரென்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 39 பேர் மாயமான நிலையில் 16 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். 

மீட்பு பணியில், ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவசரகால மீட்பு பணியாளர்கள் கொண்டு குடியிருப்பின் ஒவ்வொரு அடுக்கிலும் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களுக்கு தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை சிறிய அளவிலான கருவிகளை பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள் வழங்கி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories