கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவர் கொலை செய்த வழக்கில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது.

திண்டுக்கல்லில் கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது
திண்டுக்கல் மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வினோத் (30) இவர் கடந்த 2020-ம் ஆண்டு சுள்ளான் என்பவரை வெட்டிப் படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்பொழுது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வினோத் தனது வீட்டில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வீட்டின் உள்ளே புகுந்த ஒரு கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வினோத்தை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர் இது தொடர்பாக தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பிரபாகரன், பயிற்சி சார்பு ஆய்வாளர் ஜெயச்சந்திரன் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சுனில்சூர்யா(19), அய்யனார்(27) மற்றும் 17 வயதிற்கு குறைவான 3 சிறுவர்கள் ஆகிய 5 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags : கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவர் கொலை செய்த வழக்கில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது.