குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த டூரிஸ்ட் வேனும், ஆட்டோவும் மோதி விபத்து - பெண் பலி .

தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் பகுதியில் டூரிஸ்ட் வேனும், ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் பலியானார்.பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
குற்றாலத்தில் தற்போது சீசன் காலமென்பதால் அருவிகளில் நீராடிட தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்துசென்றவண்ணமுள்ளனர்.இன்று காலை பழைய குற்றாலத்தில் தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பகுதியை சேர்ந்த 20 பேர் டூரிஸ்ட் வேனில் வந்து குளித்துவிட்டு குற்றாலம் நோக்கி சென்றபோது ஓட்டுனரின் கவனக்குறைவு காரணமாக வளைவில் வண கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி குற்றாலத்தில் இருந்து பழைய குற்றால அருவி நோக்கி 6 சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த ஆட்டோமீது மோதி விபத்துக்குள்ளாகியதில் ஆட்டோ மீது வேனானது ஏறி, வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இதில், ஆட்டோவில் பயணம் செய்த டிரைவர் உட்பட சில பெண்கள் படுகாயமடைந்தனர். இந்த நிலையில், டூரிஸ்ட் வண கவிழ்ந்ததில் வேனில் பயணம் செய்த சிலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து சென்ற குற்றாலம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு 2ஆம்புலன்ஸ் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தென்காசி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சென்னையை சேர்ந்த யாஸ்மின் என்ற பெண் பரிதாபமாக பலியானார்.மதுபோதையில் வேனை இயக்கிய ஓட்டுநர் ராஜ என்பவரை குற்றாலம் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
Tags : குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த டூரிஸ்ட் வேனும், ஆட்டோவும் மோதி விபத்து - பெண் பலி