பிரதமர் மோடியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

by Editor / 29-04-2025 02:37:52pm
பிரதமர் மோடியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

பிரதமர் மோடியை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். புதிய மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு அரசியல் சூழல், பாஜக - அதிமுக கூட்டணி, கட்சி வளர்ச்சிப்பணி, சட்டசபை தேர்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via