இதுவரை சட்டப்பேரவை தலைவர்களாக பதவி வகித்தவர்கள் யார்? யார்?
1950ஆம் ஆண்டு இந்தியா குடியரசானதன் பிறகு மாநில சட்டப்பேரவை, சட்ட மேலவை என இரு அவைகள் செயல்பட்டன. இதில், சட்ட மேலவையின் தலைவர் சேர்மன் என்றும், கீழவையின் தலைவர் சபாநாயகர் என்றும் அழைக்கப்பட்டு வந்தார். தொடர்ந்து 1986ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்ட மேலவை நீக்கப்பட்டதை அடுத்து, சபாநாயகரே சட்டப்பேரவையின் தலைவராக முழு அதிகாரத்துடன் திகழ்ந்து வருகிறார்.இதுவரை பதவி வகித்த சபாநாயகர்களின் பட்டியல் பின்வருமாறு:
பெயர் பதவிக் காலம்
ஜெ சிவசண்முகம் பிள்ளை 06 மே 1952 16 ஆக்ஸ்ட் 1955
என். கோபால மேனன் 27 செப்டம்பர் 1955 01 நவம்பர் 1956
யு. கிருஷ்ணா ராவ் 30 ஏப்ரல் 1957 03 ஆகஸ்ட் 1961
எஸ். செல்லபாண்டியன் 31 மார்ச் 1962 14 மார்ச் 1967
சி. பா. ஆதித்தன் 17 மார்ச் 1967 12 ஆகஸ்ட் 1968
புலவர் கே. கோவிந்தன் 22 பிப்ரவரி 1969 14 மார்ச் 1971
கே. ஏ. மதியழகன் 24 மார்ச் 1971 03 ஆகஸ்ட் 1973
புலவர் கே. கோவிந்தன் 03 ஆகஸ்ட் 1973 03 ஜூலை 1977
முனு ஆதி 06 ஜூலை 1977 18 ஜூன் 1980
க. இராசாராம் 21 ஜூன் 1980 24 பிப்ரவரி 1985
பி. எச். பாண்டியன் 27 பிப்ரவரி 1985 05 பிப்ரவரி 1989
மு. தமிழ்க்குடிமகன் 08 பிப்ரவரி 1989 30 ஜூன் 1991
சேடப்பட்டி முத்தையா 03 ஜூலை 1991 21 மே 1996
பி. டி. ஆர். பழனிவேல்ராஜன் 23 மே 1996 21 மே 2001
கா. காளிமுத்து 24 மே 2001 01 பிப்ரவரி 2006
ஆர். ஆவுடையப்பன் 19 மே 2006 15 மே 2011
டி. ஜெயக்குமார் 27 மே 2011 29 செப்டம்பர் 2012
பி. தனபால் 10 அக்டோபர் 2012 ஏப்ரல் 2021
Tags :