தமிழக கேரளா எல்லையில் சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற ரயில்வே ஊழியர் கைது 

by Editor / 13-02-2022 10:02:06am
தமிழக கேரளா எல்லையில் சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற ரயில்வே ஊழியர் கைது 

தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை அருகே  அமைந்துள்ளது ஆரியங்காவு ரெயில் நிலையம்.இந்த ரயில் நிலையத்தின்  அருகே உள்ள ரெயில்வே பாலத்தின் அடியில் 2 சந்தன மரங்கள் வெட்டிக்கிடப்பதாக ஆரியங்காவு காடம்பாறை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 
அதன் அடிப்படையில் வனத்துறையினர் அங்கு சென்று சந்தன மரங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், அப்பகுதியில் பணிபுரிந்து வரும் ரெயில்வே ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.அவர்கள் 
தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியை சேர்ந்த சித்தாயி என்ற ரெயில்வே ஊழியரிடம் விசாரித்தபோது அவரும், அவருடன் பணிபுரியும் செங்கோட்டை பகுதியை சேர்ந்த முருகன் என்பவரும் சந்தன மரங்களை வெட்டி விற்பனைக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து சித்தாயியை கேரளமாநிலம் ஆரியங்காவு வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ரயில்வே ஊழியர் முருகனை வலைவீசி தேடி வருகின்றனர்.

தமிழக கேரளா எல்லையில் சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற ரயில்வே ஊழியர் கைது 
 

Tags : Railway employee arrested for trying to smuggle sandalwood across the Tamil Nadu-Kerala border

Share via