பாலம் இடிந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

மத்திய குஜராத்தையும் சௌராஷ்டிராவையும் இணைக்கும் கம்பீரா பாலம் இன்று (ஜூலை. 09) திடீரென உடைந்து விழுந்ததில், அதில் சென்று கொண்டிருந்த சில வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தன. இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். உடைந்த பாலம் 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
Tags :