பைக்கில் தீப்பிடித்து உடல் கருகி பலி
திருவோணம் அருகே வாட்டாத்திக் கொல்லைக்காடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் செந்தில்குமார் (34). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் செந்தில்குமாருக்கும் இவரது மனைவிக்கும் குடும்ப பிரச்னை இருந்து வந்ததாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் செந்தில்குமார் அவரது பைக்கில் பெட்ரோல் டேங்கை திறந்து தீக்குளிக்கப் போவதாக மிரட்டி உள்ளார். அருகில் இருந்த உறவினர்கள் கண்டித்துள்ளனர். செந்தில்குமார் அருகில் நின்ற பைக்கில் பெட்ரோல் டேங்க் திறந்திருப்பது தெரியாமல் பைக் மீது உட்கார்ந்து கொண்டு பீடி பற்ற வைத்துள்ளார். எதிர்பாராத வகையில் திடீரென பெட்ரோல் டேங்க் தீ பற்றி செந்தில்குமார் உடல் முழுவதும் தீ பரவியது. இதனால் செந்தில்குமார் உடல் கருகிய நிலையில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் இறந்தார். இதுகுறித்து வட்டாத்திக் கோட்டை காவல் உதவி ஆய்வாளர் விஷ்ணுபிரசாத் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags :



















