கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் பலத்த காற்றுடன் மழை.

by Staff / 10-10-2025 12:13:02am
கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் பலத்த காற்றுடன் மழை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இன்று காலை முதல் மதியம் வரை வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் மதியத்திற்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது மட்டுமின்றி லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது நேரம் செல்ல செல்ல சாரல் மழை காற்றுடன் பலத்த மழையாக பெய்தது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்தது.கோவில்பட்டி நகர் மட்டுமின்றி காமநாயக்கன்பட்ட,  தீத்தாம்பட்டி துறையூர், புதூர், இனாம் மணியாச்சி, பாண்டவர் மங்கலம், திட்டங்குளம், மூப்பன்பட்டி, இலுப்பையூரணி, நாலாட்டின்புதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

 

Tags : கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் பலத்த காற்றுடன் மழை

Share via

More stories