இந்தியாவில் 32 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று பல்கலைக்கழக மானிய குழு

by Admin / 21-02-2026 09:06:22pm
இந்தியாவில் 32 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று பல்கலைக்கழக மானிய குழு

இந்தியாவில் 32 பல்கலைக்கழகங்கள் போலியானவை என பல்கலைக்கழக மானிய குழு போலி பல்கலைக்கழகபட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் போலி பல்கலைக்கழகங்களில் இருந்து பெறப்படும் பட்டங்கள் உயர் கல்விக்கு அல்லது வேலை வாய்ப்புக்கு தகுதி உடையவை அல்ல என்று பல்கலைக்கழக மானியக் குழு எச்சரித்து உள்ளது.

12 போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல்..

வணிக பல்கலைக்கழக லிமிடெட் (தர்யாகஞ்ச்)
ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம்
தொழில் பல்கலைக்கழகம்
ஏடிஆா்-மைய நீதித்துறை பல்கலைக்கழகம் (ராஜேந்திர இடம்)
இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம்
சுய வேலைவாய்ப்புக்கான விஸ்வகர்மா திறந்தவெளி பல்கலைக்கழகம்
ஆத்யாத்மிக் விஸ்வவித்யாலயா (ஆன்மீக பல்கலைக்கழகம் - ரோகிணி)
அகில இந்திய பொது மற்றும் உடல் சுகாதார அறிவியல் நிறுவனம் 
ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தின் உலக அமைதி
மேலாண்மை மற்றும் பொறியியல் நிறுவனம்
தேசிய மேலாண்மை தீர்வு நிறுவனம்
மலை மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்வணிக பல்கலைக்கழக லிமிடெட் (தர்யாகஞ்ச்)
.உத்தரப்பிரதேசத்தில் 4, போலிப் பல்கலைக்கழகங்கள் உள்ளன.(காந்தி ஹிந்தி வித்யாபீடம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பல்கலைக்கழகம்) கர்நாடகாவில் 2) குளோபல் ஹியூமன் பீஸ் பல்கலைக்கழகம் உள்பட )போலி பல்கலைக்கழகங்கள். கேரளாவில் 2 , பல்கலைக்கழகங்கள்.(புனித ஜான் பல்கலைக்கழகம்),புதுச்சேரியில் 2 , ஸ்ரீ போதி அகடாமி மற்றும் உஷா லட்சுமணன் கல்வி கல்லூரி) போலி பல்கலைக்கழகங்கள். இந்த 32 போலி பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டில் டிடிபி சமஸ்கிருத பல்கலைக்கழகம் என்கிற பெயரில் இயங்கி வரும் பல்கலைக்கழகம் போலியானது என்று தகவலை வெளியிட்டுள்ளது.

 

Tags :

Share via