நொய்டாவில்ஊதிய உயர்வு கேட்டு நான்காவது நாளை எட்டும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது
உத்திரபிரதேசம் நொய்டாவில்ஊதிய உயர்வு கேட்டு நான்காவது நாளை எட்டும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. செக்டார் 62 63 ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் வன்முறை ஏற்பட்டுள்ளது போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைத்ததுடன் கல்விச்செயிலும் ஈடுபட்டனர் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சாலைகளில் மறியலில் ஈடுபட்டதால் டெல்லி நொய்டா பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வன்முறையை தொடர்ந்து உத்தர பிரதேச அரசு அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊதிய உயர்வு ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து முன் தேதியிட்டு நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு மூன்று அலகாக சம்பளம் உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரணமான திறமையை கொண்ட தொழிலாளர்களுக்கு 13 ஆயிரத்து 690 ரூபாய் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உள்ளதொழிலாளர்களுக்கு 14,36 ரூபாயும் திறமையான தொழிலாளர்களுக்கு 16, 025 ரூபாயும் சம்பளமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. அருகிலுள்ள அரியானா மாநிலத்திலும் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு 18 ஆயிரத்திலிருந்து இருபதாயிரம் வரை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் பனிரெண்டு மணி நேர வேலையில் இருந்து 8 மணி நேரமாக குறைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் வைத்து போராட்டத்தை தொடங்கினர். தற்போதுள்ள நிலைமையில் 6,0 62, 84 போன்ற தொழிற்சாலை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Tags :



















