அடுத்த வாரம் முதல் கோவில்களில் தமிழில் அர்ச்சனை-அமைச்சர் சேகர்பாபு

by Editor / 02-08-2021 06:36:19pm
அடுத்த வாரம் முதல் கோவில்களில் தமிழில் அர்ச்சனை-அமைச்சர் சேகர்பாபு

சென்னையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சேகர்பாபு தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் கோவில்களில் தமிழில்தான் கட்டாயம் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் புதன் அல்லது வியாழக்கிழமை தமிழில் அர்ச்சனை நடைபெறும்.


மேலும் அன்னை தமிழில் அர்ச்சனை என்று பெயர் பலகை வைக்கப்பட்டு, அர்ச்சகர்களின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக 47 கோவில்களை தேர்வு செய்து அன்னை தமிழில் அர்ச்சனை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்படும். தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயர், தொலைபேசி எண் ஆகியவை பலகையில் எழுதி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories