ஆந்திராவில் 300 நாய்கள் விஷம் வைத்து கொலை
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி மாவட்டம் லிங்கபாளையம் கிராமத்தில் அதிகளவில் தெரு நாய்கள் இருந்துள்ளது. இதனால் நாய்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து வாகனத்தில் செல்வபவர்களை துரத்தி கடிப்பது என கூட்டமாக சேர்ந்து சேட்டை செய்து வந்துள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக பகுதி மக்கள் பஞ்சாயத்து அலுவலகத்தில் தொடர்ச்சியாக புகார்கள் அளித்த வண்ணம் இருந்தனர். இதனையடுத்து, பஞ்சாயத்து அலுவலர்கள் நாய்களை துரத்தி பிடித்து வனப்பகுதியில் விட்டாலும் அது ஊருக்குள் மீண்டும் வந்துவிடும் என்று எண்ணியுள்ளனர்.
இதனால் நாய்களை கொலை செய்ய திட்டமிட்ட அலுவலர்கள், பிரியாணி வாங்கி வந்து விஷம் கலந்து நாய்களுக்கு கொடுத்துள்ளனர். இந்த பிரியாணியை சாப்பிட்ட சுமார் 300 நாய்கள் ஆங்காங்கே இறந்து கிடந்துள்ளது. பின்னர், நாய்களின் உடலை அகற்றிய பஞ்சாயத்து அதிகாரிகள் வனப்பகுதியில் வீசியுள்ளனர்.
2 நாட்களில் 300 நாய்களின் சடலம் அழுகி வீச தொடங்கிய நிலையில், இந்த விஷயம் விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து பார்க்கையில் 300 நாய்களின் சடலம் மண்ணில் புதைக்கப்படாமல் வெளியே இருந்துள்ளது.
இந்த விஷயம் தடோரப்பாக தர்மாஜி குடெம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து புகார் அளிக்கவே, இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சாயத்து தரப்பில் விஷம் வைக்கப்பட்ட விவகாரத்திற்கு மறுப்பு தெரிவித்தனர் .
Tags :



















