பயங்கர விபத்து.. 12 பேர் சம்பவ இடத்திலேயே பலி

மத்திய பிரதேசத்தில் பயங்கர சாலை விபத்து நடந்தது. சத்னா மாவட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பேருந்துகள் மீது அதிவேகமாக லாரி மோதியது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர், 50 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து மொஹானியா காட்டி மலைப் பகுதியில் நடந்துள்ளது. அமித் ஷா பேரணியில் கலந்து கொண்டு திரும்பும் போது விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்தியப் பிரதேச முதல்வர் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
Tags :