மதுரையில் கூடுதல் பாதுகாப்பு பணியில் போலீசார்.

கடந்த 2002 ஆகஸ்ட் 29ல் பெங்களுரில் போலீசாரால் சுட்டப்பட்டு இமாம் அலி உயிரிழந்தார். பின்னர் இமாம் அலியின் உடல் மதுரை நெல்பேட்டையில் அடக்கம் செய்யப்பட்டது.இந்நிலையில் நாளைய தினம் இமாம் அலி நினைவு தினம் என்பதால் முன்னெச்சரிக்கையாக மதுரையில் போலீசார் முக்கிய சந்திப்பு, பள்ளிவாசல், வழிபாடு தலங்களில் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.உளவுதுறை போலீசார் கண்காணிப்பு பணியில் உள்ளனர். இரவில் வாகனம் தணிக்கை மற்றும் ரோந்து பணியில் கூடுதலாக போலீசார் ஈடுபடவுள்ளனர்.
Tags :