இன்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திருப்பூரில் பிரச்சாரம்

by Admin / 14-04-2026 12:52:02pm
இன்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திருப்பூரில் பிரச்சாரம்

இன்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திருப்பூர் மாவட்டத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். சென்னையிலிருந்து விமான மூலம் கோவை வந்தடையும் அவர் அங்கிருந்து கார் மூலமாக மதியம் அவிநாசி சென்று சேர்கிறார். மதியம் ரெண்டு மணி முதல் மாலை 5 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ள அவருக்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது 3:00 மணி அளவில் ஆட்டையாம்பாளையம் பிரிவிலிருந்து தனது பிரச்சார வாகனத்தில் பயணத்தை மேற்கொள்கிறார் .அவிநாசி பழைய மற்றும் புதிய பேருந்து நிலைய பகுதிகள் வழியாக ரோடு சோ நடத்துகிறார். நான்கு வழி சாலை பெருமாநல்லூர் சந்திப்பில் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றுகிறார். பின்னர் திருப்பூர் -பூலுவபட்டி வரை ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் மேற்கொண்டு அந்த இடத்தில்  தனது பிரச்சாரத்தை முடித்துக் கொள்கிறார்.

இன்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திருப்பூரில் பிரச்சாரம்
 

Tags :

Share via
Logo