ஹங்கேரிபொதுத் தேர்தலில்பீட்டர் மாக்யார் தலைமையிலான டிஸ்ஸா கட்சி மகத்தான வெற்றி .

by Admin / 14-04-2026 01:50:18pm
ஹங்கேரிபொதுத் தேர்தலில்பீட்டர் மாக்யார் தலைமையிலான டிஸ்ஸா கட்சி மகத்தான வெற்றி .

ஹங்கேரியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், 16 ஆண்டுகள் நீடித்த விக்டர் ஓர்பானின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. விக்டர் ஓர்பான் 2010 முதல் தொடர்ந்து நான்கு முறை பிரதமராகப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பீட்டர் மாக்யார் தலைமையிலான டிஸ்ஸா கட்சி மகத்தான வெற்றி பெற்றது. 

தேர்தல் முடிவுகள் வெளியான சில மணிநேரங்களிலேயே விக்டர் ஓர்பான் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, பீட்டர் மாக்யாருக்கு வாழ்த்து தெரிவித்தார். மொத்தம் உள்ள 199 நாடாளுமன்ற இடங்களில், பீட்டர் மாக்யாரின் டிஸ்ஸா கட்சி 138 இடங்களைக் கைப்பற்றி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.இந்தத் தேர்தலில் ஏறத்தாழ 79.5% வாக்குகள் பதிவாகின, விக்டர் ஓர்பானின் ஃபிடெஸ்கட்சி 55 இடங்களை மட்டுமே பெற்றது.

தேர்தல் முடிவுகள் ஹங்கேரி வரலாற்றில் மிக முக்கியத்துவமுடையதாகப்பாா்க்கப்படுகிறது.. ஊழலுக்கு எதிரான போராட்டம் - ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை மேம்படுத்துதல் ஆகியவற்றை மாக்யார் தனது முக்கிய தேர்தல் வாக்குறுதிகளாக முன்வைத்திருந்தார். 

 

Tags :

Share via

More stories

Logo