அமெரிக்க கடற்படை கப்பல்கள் ஈரானிய துறைமுகங்களை அதிகாரப்பூர்வமாக முற்றுகை.
அமெரிக்க கடற்படை கப்பல்கள் ஈரானிய துறைமுகங்களை அதிகாரப்பூர்வமாக முற்றுகையிட தொடங்கியுள்ளன. அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு ஈரானிய துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் அனைத்து கப்பல் போக்குவரத்திற்கும் எதிரான முற்றுகையை நடைமுறைப்படுத்தியுள்ளது .பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடந்த அமைதி பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து ஈரானுக்கு அழுத்தம் கொடுக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஈரானின் பெர்சிய வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் உள்ள அனைத்து துறைமுகங்களுக்கும் வரும் மற்றும் அங்கிருந்து செல்லும் கப்பல்களுக்கு இந்த முற்றுகை பொருந்தும் என்றும் இருப்பினும் ஹார்முஸ் ஜல சந்தி வழியாக ஈரான் அல்லாத பிற நாடுகளுக்கு செல்லும் கப்பல்களைத் தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என்றும் அமெரிக்க தெரிவித்துள்ளது,. ஈரானிய துறைமுகங்களை அணுகும் எந்த ஒரு ராணுவக் கப்பலும் போர் நிறுத்த மீறலாக கருதப்படும் என ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல் படை எச்சரித்துள்ளது. இந்த முற்றுகையை ஈரான் கட ல்கொள்ளை என்றும் சாடி உள்ளது .இந்த முற்றுகை அறிவிப்பை தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணையினுடைய விலை பீப்பாக ஒன்றுக்கு நூறு டாலராக அதிகரித்து உள்ளது.
டொனால்டு டிரம்ப்
Tags :


















