தமிழகத்தின் உரிமைகளை பறிக்கலாம் என்றால் மாநிலம் ஸ்தம்பிக்கும். மக்கள் வீதிக்கு வந்து போராட்டங்களை நடத்துவார்கள்.

by Admin / 14-04-2026 02:44:06pm
தமிழகத்தின் உரிமைகளை பறிக்கலாம் என்றால் மாநிலம் ஸ்தம்பிக்கும்.  மக்கள் வீதிக்கு வந்து போராட்டங்களை நடத்துவார்கள்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வழியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு எச்சரிக்கை விடுத்து காணொளி காட்சியை பதிவிட்டுள்ளார் . அதில் அவர்,தொகுதி மறுவரையறைக்கு  எதிா்ப்பு தொிவித்து  வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாட்டின்  இறுதி எச்சரிக்கை  என்று கூறி தொகுதி  மறுவரையரை மூலம்  தமிழகத்தின்  உரிமைகளை பறிக்கலாம் என்றால் மாநிலம் ஸ்தம்பிக்கும் வகையில்  மக்கள் வீதிக்கு வந்து மிகப்பெரிய போராட்டங்களை நடத்துவார்கள் என்றும் மக்கள் தொகையை சரியாக  கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களின் பாராளுமன்ற இடங்களை குறைத்து வட மாநிலங்களின் அதிகாரத்தை அதிகரிக்கச் செய்யும் சூழ்ச்சி இது என்றும்  முறையான ஆலோசனைகள் இன்றி மாநிலங்களின் ஒப்புதல் பெறாமல்  இந்த மசோதாவை   மத்திய அரசு ரகசியமாக திணிக்க முயல்வதாகவும் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் தேர்தல் பணிகள் நடந்து கொண்டிருக்கும்  வேளையில் அவசரமாக இந்த சிறப்பு அமர்வை கூட்டி மசோதாவை நிறைவேற்ற முயல்வது ஜனநாயக விரோதமானது. என்றும் தேர்தல் நேரத்தில் அந்த வேலைகளில் தென் மாநிலங்கள் கவனம் செலுத்தும் அதனால் சத்தம் போடாமல் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி விடலாம்  என்று  நினைப்பது தவறு என்றும்  திமுக ஆட்சியில் இருக்கிறது என்பதை விட திமுக ஒரு வலுவான கட்சியாக தமிழகத்தில் இருக்கிறது  என்றும் எங்களுக்கு ஆட்சியை விட தமிழக நலன்கள் தான்  முக்கியம் என்றும் தெரிவித்து இந்த முயற்சியை தாங்கள் கைவிட வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்து தம் வலைதள பதிவில் பதிவிட்டுள்ளர். இந் த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

Tags :

Share via
Logo