விரைவுரயில்ரயில் டிக்கெட்பரிசோதகரை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட பயணி. பலியான பரிசோதகர்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பாட்னாவுக்கு பாட்னா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நேற்று (ஏப்.2) மாலை புறப்பட்டுச் சென்றது. எர்ணாகுளத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் அந்த ரயிலில் டிக்கட் பரிசோதிக்கும் டி.டி.இ-யாக பணியில் இருந்துள்ளார். திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வேலப்பயவில் ரயில் சென்றுகொண்டிருந்தபோது எஸ்-11 கோச்சில் அவர் டிக்கெட் பரிசோதனை செய்ய சென்றபோது அங்கு வட மாநில தொழிலாளர்கள் சிலர் டிக்கெட் இல்லாமல் பயணித்துள்ளனர்.
ரயிலின் வாசலுக்கு அருகே நின்றிருந்த அவர்களிடம் டிக்கெட் கேட்டதுபோது தகராறு செய்துள்ளார்கள். வாக்குவாதம் முற்றிய நிலையில் குடிபோதையில் இருந்த வடமாநில தொழிலாளி ரஜினிகாந்த் என்பவர் டி.டி.இ வினோத்தை ஓடும் ரயில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார். மற்றொரு ரயிலின் சக்கரத்தில் சிக்கிய வினோத் இறந்துள்ளார்.
எர்ணாகுளத்தைச் சேர்ந்த கே.வினோத், ஆரம்பத்தில் ரயில்வேயில் தொழில்நுட்ப ஊழியராகப் பணியில் சேர்ந்தார். ஏறக்குறைய இருபது வருட சேவையுடன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு TTE பொறுப்பை ஏற்றார்.
அவரது தொழில்முறை கடமைகள் தவிர, வினோத் ஒரு கலைஞராக அங்கீகரிக்கப்பட்டு ரயில்வே ஊழியர் சங்கத்தில் பதவிகளை வகித்தார். பல்வேறு படங்களில் சிறிய போலீஸ் வேடங்களில் தனது நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார். ரயில்வே பணியிலும் கலைத் துறையிலும் தனது சக ஊழியர்களிடையே நட்பான தன்மைக்காக வினோத் மதிக்கப்படும் மனிதராக அவர் இருந்ததாக அவரது சக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.வட மாநிலத் தொழிலாளரின் இந்த அத்துமீறல் சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags : விரைவுரயில்ரயில் டிக்கெட்பரிசோதகரை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட பயணி. பலியான பரிசோதகர்.