பழங்குடியின பெண்ணை நடு ரோட்டில் நிர்வாணப்படுத்தி அடித்து கொடூர தாக்குதல்

by Editor / 14-08-2022 12:17:48pm
பழங்குடியின பெண்ணை நடு ரோட்டில் நிர்வாணப்படுத்தி அடித்து கொடூர தாக்குதல்

பழங்குடியின பெண்ணை அவரது கணவர், உறவினர்கள் முன் கொடூரமாக தாக்கி அந்த பெண்ணின் உடைகளை கிழித்து நிர்வாணப்படுத்திய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொடூர தாக்குதல் காரணமாக அந்த பெண்ணும் அவரது கணவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மத்தியப் பிரதேச மாநிலம் ஜஹாபுவா பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கணவனை விட்டு பிரிந்து 8 மாதம் அதே பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். அந்த பெண் முகேஷை பிரிந்து மீண்டும் தனது கணவர் வீட்டிற்கே வந்து அவருடன் வாழத் தொடங்கியுள்ளார். பெண் பிரிந்து சென்ற ஆத்திரத்தில் முகேஷ் தனது கூட்டாளிகள் 5 பேரை அழைத்து அந்த பெண் வசிக்கும் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து, அந்த பெண்ணை கணவர் மற்றும் உறவினர் முன்னரே கட்டாயமாக வெளியே இழுத்து வந்து சாலையில் வைத்து கொடூரமாக தாக்கி ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தியுள்ளனர். பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் தடுக்க முயற்சித்த நிலையில் அவர்கள் மீதும் அந்நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அக்கம்பக்கத்தினர் இந்த சம்பவத்தை பார்த்தும் வீடியோக்கள் எடுத்த நிலையில், இந்த தாக்குதலை தடுக்க யாரும் முயலவில்லை.

 

Tags :

Share via