பிரபல பங்குசந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்

by Editor / 14-08-2022 12:14:37pm
பிரபல பங்குசந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்

தொழிலதிபரும், பிரபல பங்குசந்தை முதலீட்டாளருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல்நலக்குறைவால் காலமானார். ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கடந்த சில வாரங்களாக உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மும்பையில் இன்று ஜுன்ஜுன்வாலா காலமானார். ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் சொத்து மதிப்பு சுமார் 5.5 பில்லியன் டாலர் என்று போர்ப்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

இன்று காலை உயிரிழந்தார் அவரது மறைவிற்குப்  பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார் அடுத்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில். ஜுன்ஜுன்வாலா இந்தியாவின் முன்னேற்றத்தில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததாகவும் அவரது மறைவு வருத்தம் அளிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via