போலீசை விமர்சித்தவர் அதே இடத்தில் கண்ணியமாக எச்சரித்த இன்ஸ்பெக்டர்

by Editor / 13-07-2022 02:15:24pm
போலீசை விமர்சித்தவர் அதே இடத்தில் கண்ணியமாக எச்சரித்த இன்ஸ்பெக்டர்

நெல்லை இந்து முன்னணி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசியாவர்  காவல்துறையினர் கடுமையாக விமர்சித்து பேசியதால் பொறுமை இழந்த காவல் ஆய்வாளர் ஒருவர் அவரிடம் அழைத்து கண்ணியத்துடன் எச்சரித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.காளி வேடத்தில் புகைபிடித்து  சர்ச்சையை உண்டாக்கிய லீனா மணிமேகலையை கண்டித்து கைது செய்யக் கோரி நெல்லை பேட்டையில் இந்து முன்னணி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சாளர் ஒருவர் லீனா மணிமேகலை இதுவரை கைது செய்த தமிழக காவல்துறையை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஹரிஹரன் என்பவர் அவரது பேச்சால் பொறுமை இழந்து பேசிக்கொண்டு இருந்த அவரிடம் சென்று நாங்களும் மனிதர்கள் தான் எங்களுக்கும் குடும்பம் இருக்கின்றது பேசும்போது தயவுசெய்து வார்த்தைகளை கொஞ்சம் பார்த்து பயன்படுத்துங்கள் என்று கூறினார்.

 

Tags :

Share via

More stories