பிறந்து 10 நாளே ஆன குழந்தையின் உடலை கடித்து குதறிய நாய்கள்
சென்னை சோழவரம் அருகே சூரப்பட்டு கிராமத்தில் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையின் உடலை நாய்கள் கடித்து குதறிக் கொண்டிருந்தன. இதைப் பார்த்து அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து, நாய்களை விரட்டினர். அப்போது குழந்தையின் இடுப்பு, கால் வரை உள்ள பாகங்கள் அழுகிய நிலையில் காணப்பட்டன. இதனால் அந்த குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை வீசிச்சென்ற தாயை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags :