செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவு

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகிறார். செந்தில் பாலாஜிக்கு 33-வது முறையாக நீட்டிக்கப்பட்ட நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைகிறது. அமலாக்கத்துறை வழக்கின் உண்மை ஆவணங்களை வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவற்றை பெற்றுக் கொள்வதற்காக இன்று நேரில் ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டிருந்தார். கடந்த ஆண்டு ஜுன் மாதம் 14-ஆம் தேதி செந்தில் பாலாஜி கைதான நிலையில், 11வது மாதமாக புழல் சிறையில் உள்ளார்.
Tags :