சிங்காரவேலர் பிறந்தநாள் - தமிழக அரசு மரியாதை

by Staff / 18-02-2024 12:23:16pm
சிங்காரவேலர் பிறந்தநாள் - தமிழக அரசு மரியாதை

சிங்காரவேலர் என அறியப்படும் மலையபுரம் சிங்காரவேலு 18 பிப்ரவரி 1860-ல் பிறந்தார். இவர் தமிழ்நாட்டு பொதுவுடமைக் கொள்கையாளர், தொழிற்சங்கவியர், மற்றும் இந்திய விடுதலைப் போராளியாகவும் திகழ்ந்தார்.சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 165வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.இது குறித்து ட்வீட் செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்ப் பற்றும் பொதுவுடைமைக் கொள்கையும் கொண்டு உழைக்கும் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 165வது பிறந்தநாள் இன்று! ஏகாதிபத்தியம், மதவாதம் இரண்டுமே முடக்குவாத நோய்தான் சமுதாயத்துக்கு என்று தமிழ் மண்ணில் விளைந்த புரட்சியாளரான அவரது நினைவுகளைப் போற்றி, அவர் விரும்பிய சுயமரியாதையும் சமதர்மமும் தழைத்தோங்கும் சமூகம் வளர பாடுபடுவோம் என குறிப்பிட்டார்.

 

Tags :

Share via

More stories

Logo