ரூ.12 கோடி மதிப்புள்ள பழமையான சிலைக் கடத்தல் 4 பேர் கைது.

by Editor / 17-08-2022 08:35:32pm
ரூ.12 கோடி மதிப்புள்ள பழமையான  சிலைக் கடத்தல் 4 பேர் கைது.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியில் உள்ள மலையின் மேல் ஆதிநாதப் பெருமாள் ரங்கநாயகி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சங்க காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த கோயில் தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்த கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் 2007ம் ஆண்டு சிலர் நன்கொடையாக புதிய சிலைகளை நிறுவ முடிவு செய்து, பெருமாள் சிலை, ஸ்ரீதேவி சிலை, பூதேவி சிலை, சந்திரசேகரர் சிலை, பார்வதி சிலை என 5 உலோக வெண்கல சிலைகளை நிறுவப்பட்டது.

திண்டுக்கல் முள்ளிபாடியை சேர்ந்த சவரிமுத்து மகன் பிரபாகரன், டி.கல்லுப்பட்டியை சேர்ந்த குமார், திண்டுக்கல் சீலைவாடியை சேர்ந்த ஈஸ்வரன், வெங்கடேசன் உள்ளிட்டோர்  ஆதிநாத பெருமாள் ரங்கநாயகி கோயிலில் புகுந்து பூசாரி கோயில் செயலாளர் ஆகியோரை கத்தி முனையில் மிரட்டி ஒரு அறையில் அடைத்து வைத்து விட்டு சிலைகளை திருடி சென்றனர்.இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணைமேற்கொண்ட நிலையில் 

திண்டுக்கல்லில் 12 கோடி மதிப்பிலான 5 சிலைகள் விற்கப்படுவதாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சிலை கடத்தல் பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு சிலைகளை பறிமுதல் செய்தனர். சிலைகளை கடத்த முயன்ற பால்ராஜ், இளவரசன், யோவேல் பிரபாகர், தினேஷ்குமார் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo