முதல்வர் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்

by Staff / 14-07-2023 11:42:33am
முதல்வர் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தற்போது திமுக எம்.பி-க்கள் கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்பப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஆளுநர் ஆா்.என்.ரவியின் செயல்பாடுகள், பொது சிவில் சட்டம், மணிப்பூர் கலவரம், அமலாக்கத்துறை சோதனை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய விஷயங்களை எழுப்புவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

 

Tags :

Share via

More stories