by Staff /
06-07-2023
02:45:15pm
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதிலாக கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக, வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமியை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய நீதிமன்றக் காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கோவை மாவட்ட பொறுப்பு வகித்து வந்த அவருக்கு பதில், அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Tags :
Share via