தமிழகத்தில் கோர விபத்து - 6 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் சாலையை கடக்கும் போது லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே 6 பேர் பலியான நிலையில், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சாலை விபத்திற்கு காரணமான லாரி டிரைவர் தலைமறைவாகியுள்ளார்.
Tags :