ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்திய மூன்று பேர் கைது.

by Staff / 22-03-2023 03:00:44pm
ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்திய மூன்று பேர் கைது.

தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜசிங்கம் மகன் பாரத் (38) என்பவர் எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழநம்பிபுரம் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.நேற்று பாரத் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அந்த வகுப்பில் படிக்கும் ஒரு மாணவர் பாடத்தை கவனிக்காமல் பின்னால் இருந்தவரை ஆசிரியர் பாரத் அந்த மாணவனை முன்னாள் வந்து உட்காரும்படி கூறியுள்ளார். இதனையடுத்து அந்த மாணவர் முன்னாள் வரும் போது தவறி கீழே விழுந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து நேற்றைய தினமே அந்த மாணவனின் பாட்டியானா கீழநம்பிபுரம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி (53) என்பவரது மனைவி மாரிச்செல்வி என்பவர் ஆசிரியர் பாரத சத்தம் போட்டுச் சென்றார். 

இந்நிலையில் இன்று (21. 03. 2023) மதியம் ஆசிரியர் பாரதப் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மேற்படி 2ம் வகுப்பு மாணவனின் பெற்றோரான ஓட்டப்பிடாரம் தெற்கு கல்மேடு பகுதியைச் சேர்ந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்து வரும் மாணவனின் தந்தை முனியசாமி மகன் சிவலிங்கம் (34), சிவலிங்கம் மனைவி செல்வி (28). ) மற்றும் மாணவனின் தாத்தா முனியசாமி (53), முனியசாமியின் மனைவி மாரிச்செல்வி ஆகியோர் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியர் பாரத்தை தவறாக பேசி பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியரை ஓட ஓட விரட்டி கை மற்றும் கம்பால் தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

இதுகுறித்து ஆசிரியர் பாரத் அளித்த புகாரின் பேரில் எட்டையாபுரம் காவல் நிலைய வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.ஈச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜெயச்சந்திரன் அவர்களிடம் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொண்டு பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியரை தாக்கிய எதிரிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிவலிங்கம், செல்வி மற்றும் முனியசாமி ஆகிய 3 பேரையும் அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் இதுகுறித்து எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Tags :

Share via

More stories