தமிழகத்தில் வலுப்பெரும் தென்மேற்கு பருவமழை-சுற்றுலாப்பயணிகளுக்கு தொடரும் தடை

தமிழகத்தில் தென்மேற்குப்பருவமழை வலுபெற்றுள்ளதால் தமிழகத்தில் பல்வேறுபகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது.இதன்தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் கோபி அருகே பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரி அணை உள்ளது. அங்கிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், கொடிவேரி அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கனமழை கொட்டியதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கொடிவேரி அணையில் இருந்து 2,000 கனஅடி நீர் வெளியேற தொடங்கியது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.இதேபோன்று தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
Tags : Strong Southwest Monsoon in Tamil Nadu-Continued ban for tourists