மதுரையில் மதுபோதையில் தாயிடம் சண்டையிட்ட தந்தை மீது கத்திரிகோலை எறிந்த சிறுவன் - உயிரிழந்த தந்தை

மதுரை மாநகரை சேர்ந்த கூலித்தொழிலாளியான கண்ணன் என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்துவந்துள்ளார். மதுபோதைக்கு அடிமையாகிய கண்ணன் தினசரி மது அருந்திவிட்டு மனைவியிடம் சண்டையிட்டு அடிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார். இதே போன்று நேற்று இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த கண்ணன் தனது மனைவியிடம் வாக்குவாதம் செய்து சண்டையிட்ட நிலையில் அடிக்க சென்றுள்ளார். அப்போது வீட்டிற்குள் இருந்த 9 வயதான கண்ணனின் மகன் சண்டை போடாதிங்க என கூறியபடியே தந்தை கண்ணனை தடுத்துள்ளார்.
பின்னர் சிறிதுநேரம் கழித்து மீண்டும் மதுபோதையில் தாயிடம் சண்டையிட்டு அடிக்க முயன்றபோது 9வயது சிறுவனான மகன் தன் வீட்டில் இருந்த பாசி மணி கோர்க்க பயன்படுத்தப்படும் கூர்மையான கத்தரிக்கோலை தூக்கி வீசியுள்ளார். அப்போது கத்திரிக்கோல் எதிர்பாராத விதமாக கண்ணன் உடலில் பட்டபோது நரம்பில் குத்தி ரத்தம் வந்துள்ளது. இதையடுத்து தந்தை கண்ணனை ஆம்புலன்ஸ் மூலமாக 9வயது சிறுவனும் அவரது தாயரும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது செல்லும் வழியிலயே பரிதாபமாக கண்ணன் உயிரிழந்தார். அதீத குடிப்பழக்கத்தால் தந்தையின் வாழ்க்கையும் சீரழிந்த்தோடு ஏதும் அறியாத அப்பாவி சிறுவன் மற்றும் அவரது தாயாரின் மனநிலையும் மீளாத்துயருக்கு ஆளாகியுள்ளது.இது குறித்து கூடல்புதூர் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags : மதுரையில் மதுபோதையில் தாயிடம் சண்டையிட்ட தந்தை மீது கத்திரிகோலை எறிந்த சிறுவன் - உயிரிழந்த தந்தை