என்னைப் பற்றி வதந்தி பரப்புவதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்-முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.

சென்னையில் அரசியல் ரீதியாக தான் யாரையும் சந்திக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்தித்ததாக திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்படுகிறது, இது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. என்னைப் பற்றி வதந்தி பரப்புவதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். வதந்தியை நிறுத்துங்கள் என எச்சரிக்கவில்லை, வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Tags : என்னைப் பற்றி வதந்தி பரப்புவதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்-முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.