அதிமுகவுக்கு 5 கட்சிகள் ஆதரவு
இந்திய குடியரசுக் கட்சி மாநில தலைவர் செ. கு. தமிழரசன், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சென்னையில் சந்தித்தார். அப்போது தேர்தலுக்கான தனது ஆதரவை தெரிவித்தார்.தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கத்தின் தலைவர் ஜோயல் சுந்தர்சிங், மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன், அகில இந்திய வன்னியர் குல சத்திரிய சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் முத்துசாமி, அகில இந்திய விடுதலை சிங்கங்கள் கட்சி தலைவர் குமரதேசிகன் ஆகியோரும் பழனிசாமியை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் கே. பி. முன்சாமி, ஓ. எஸ். மணியன் உள்ளிட்டோர் உடனிருந்தார்.
Tags :



















