வருமானத்தை விட 171 சதவிகிதம் கூடுதலாக சொத்து சேர்த்த பெண் ஆய்வாளர்

by Editor / 13-02-2022 09:25:36am
வருமானத்தை விட 171 சதவிகிதம் கூடுதலாக சொத்து சேர்த்த பெண் ஆய்வாளர்

நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலைய பெண் இன்ஸ்பெக்டர் கண்மணி  அவரது தோழி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்  ராமன்புதுாறில் வசித்துவருபவர்  கண்மணி. பல ஆண்டுகளாக எஸ்.பி.,யின் தனிப்பிரிவில் பணியாற்றிய இவர், தற்போது நாகர்கோவில் மகளிர் காவல்நிலையத்தின் இன்ஸ்பெக்டராக உள்ளார்.இவரது கணவர் சேவியர் பாண்டியன் அரசு வழக்கறிஞராக உள்ளார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும்,ஏராளமான நபர்களுக்கு பணம் கொடுக்கல் வாங்கல் நடத்திவருவதாகவும்,தொடர்ந்து புகார்களை சென்றதைத்தொடர்ந்து அவரது  வீட்டில் நேற்று காலை 6 மணிக்கு, நாகர்கோவில் லஞ்ச ஒழிப்புத்துறை  டி.எஸ்.பி., பீட்டர் பால், இன்ஸ்பெக்டர்கள் பெஞ்சமின், ரமா உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர்  அதிரடி சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனையில் அவரது வீட்டிலிருந்து நகைகள்,7.90இலட்சம் ரொக்கம்,90இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வங்கி வைப்புநிதி சான்றுகள்,ஏராளமான நிலப்பத்திரங்கள், வங்கி கணக்குகளில் பல லட்சம் ரூபாய் பரிமாற்றம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.அவர் வருமானத்தை விட 171 சதவிகிதம் கூடுதலாக சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.கண்மணியின் தோழி அழகு நிலையம் நடத்திவரும் அமுதா வீட்டிலும், இதே நேரத்தில் சோதனை நடைபெற்றது. அமுதா மூலம் ஏராளமான வரவு,செலவுகள் நடந்ததற்கான ஆதாரங்களும்,அவரது வீட்டில் 8 இலட்சம் ரூபாய்க்கு நகைகள் வாங்கிய ரசீதுகள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.சிறப்பான வழக்கு விசாரணைக்காக, கண்மணிக்கு மத்திய அரசு விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.

வருமானத்தை விட 171 சதவிகிதம் கூடுதலாக சொத்து சேர்த்த பெண் ஆய்வாளர்
 

Tags : Female analyst who added 171 percent more property than income

Share via