முறையான அனுமதியின்றி நிரந்தர மற்றும் தற்காலிக சாலையோர கடைகள்-பழனி காவல்துறை அறிவிப்பு.

by Editor / 29-11-2024 03:02:22pm
முறையான அனுமதியின்றி நிரந்தர மற்றும் தற்காலிக சாலையோர கடைகள்-பழனி காவல்துறை அறிவிப்பு.

திண்டுக்கல் மாவட்டம் பழனி உட்கோட்டம் பழனி நகரானது அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலை கோவில் அமைவிடமாகவும் புண்ணியதலமாகவும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாகவும் காணப்படுகிறது தைப்பூசம் பங்குனி உத்திரம் போன்ற விழாகாலங்களில் பழனி நகர் மற்றும் அடிவாரம் பகுதிகளில் நகராட்சி மற்றும் அறநிலையத்துறையின் முறையான அனுமதியின்றி நிரந்தர மற்றும் தற்காலிக சாலையோர கடைகள் அமைக்கப்படுவதால் பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது போக்குவரத்துக்கு இடையூராக அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக கடைகளை காவல் துறையினர் நகராட்சி மற்றும் அறநிலையத்துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுத்து அவ்வப்போது அனுமதி பெறாத கடைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர் இதை பயன்படுத்தி காவல் துறைக்கு சம்மந்தமில்லாத நபர்களும் சில பணம் பறிக்கும் இடைத்தரகர்களும் பொய்யான வாக்குறுதி அளித்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் பெயரையோ ஆய்வாளர் பெயரையோ அல்லது காவல் துறையின் பெயரையோ பயன்படுத்தி மீண்டும் அதே இடத்தில் கடைகள் வைக்க அனுமதி பெற்றுத்தருவதாக கூறினால் வியாபாரிகளும் பொதுமக்களும் அப்படிப்பட்டவர்களை நம்ப வேண்டாம் மேலும் அப்படிப்பட்டவர்கள் குறித்து தனஞ்ஜெயன் காவல் துணை கண்காணிப்பாளர் பழனி உட்கோட்டம், அவர்கள் அலைபேசி எண்ணான 98847-41609ற்கோ அல்லது நகர் காவல் வட்ட ஆய்வாளர் மணிமாறன் அலைபேசி எண்ணான 98947-96690ற்கோ உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது அப்படி தெரிவிக்கும் பட்சத்தில் மேற்படி தவறான செயலில் ஈடுபடுவர்கள் மீது சட்டரீதியாக தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது மேலும் பழனி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலோ ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலோ அடிவாரம் பகுதிகளிலோ எந்த இடத்தில் கடை அமைக்க வேண்டும் என்றாலும் சம்மந்தப்பட்ட நகராட்சி  ஊராட்சி அல்லது அறநிலையத்துறையிடம் மட்டுமே அனுமதி பெற வேண்டும் அப்படி அனுமதி பெறுவதே சட்டபடியான நடைமுறையாகும்.

 

Tags : முறையான அனுமதியின்றி நிரந்தர மற்றும் தற்காலிக சாலையோர கடைகள்-பழனி காவல்துறை அறிவிப்பு.

Share via