வீட்டுவரி பாக்கி..மின் இணைப்பை துண்டிக்க ஆணையாளர் கடிதம்.

by Staff / 01-06-2022 05:09:59pm
வீட்டுவரி பாக்கி..மின் இணைப்பை துண்டிக்க ஆணையாளர் கடிதம்.


திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட நீண்டகாலமாக சொத்து  வரி செலுத்தாத கட்டிடங்களில் மின் இணைப்பு துண்டிப்பு செய்ய திருவள்ளூர் தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளருக்கு  திருவள்ளூர் நகராட்சி ஆணையர் இன்று நோட்டீஸ் அளித்துள்ளனர் திருவள்ளூர் நகராட்சியில் 12500 குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள் உள்ள நிலையில் சொத்து வரி. குடிநீர் வரி கட்டணம். பாதாளசாக்கடை கட்டணம் போன்ற  வரிகள் சுமார் 6 கோடியே 38 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளதால் திருவள்ளூர் நகராட்சி சார்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி தகவல்

 

Tags :

Share via

More stories