அமரனைப் போல் இந்த படமும் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்கும் .
சிவகார்த்திகேயன் நடித்து ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் மதராசி. லட்சுமி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் 125 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டுள்ளது. நேற்று விடுமுறை தினத்தில் வெளியானதால் தமிழகத்தில் 12.5 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. சேட்டிலைட், ஓ டி டி, பாடல் விற்பனையின் மூலம் 90 கோடி வரை இயற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் பட்ஜெட்டை விட அதிக லாபத்தை படம் சம்பாதித்து கொடுக்கும் என்று கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்படுகிறது. படம் கலவையான விமர்சனம் சொல்லப்பட்டாலும் மூன்று நாட்கள் தொடர் விடுமலையின் காரணமாக வசூல் அமரனை வெற்றியைப் போல் இந்த படமும் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்கும் என்று திரை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது
Tags :


















