செப். 9 ஆம் தேதிமீண்டும் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் செங்கோட்டையன்..?

by Staff / 07-09-2025 08:00:10am
செப். 9 ஆம் தேதிமீண்டும்  செய்தியாளர்களைச் சந்திக்கிறார் செங்கோட்டையன்..?

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வருகிற செப். 9 ஆம் தேதி முக்கிய நிர்வாகிகளுடன் செய்தியாளர்களைச் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றாக இணைக்க வேண்டும் என இபிஎஸ்-க்கு செங்கோட்டையன் கெடு விடுத்தார். ஆனால், நேற்று (செப்.6) செங்கோட்டைனை பொறுப்புகளில் இருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இதனால், செங்கோட்டையன் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தீவிரம் காட்டியுள்ளார்.

 

Tags : செப். 9 ஆம் தேதிமீண்டும் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் செங்கோட்டையன்..?

Share via