சோ. ராமசாமியின் மனைவி மறைவு - முதல்வர் இரங்கல்

துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராக இருந்து மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி அவர்களின் மனைவி சௌந்தரா ராமசாமி மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சோ தனது வாழ்நாளில் பத்திரிக்கை துறையிலும், திரைத்துறை மற்றும் பொது வாழ்விலும் தனி முத்திரை பதித்ததற்கு உறுதுணையாக இருந்த அவரது மனைவி "சௌந்தரா ராமசாமியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.
Tags :