ஆழ்வார்குறிச்சி அருகே ஒருவர் தலை துண்டித்து கொடூர கொலை
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே கருத்த பிள்ளையூர் அந்தோனியார் தெருவை சேர்ந்தவர் அருள் என்பவரது மகன் சொக்கன் என்ற இருதயராஜ் (45) .இவர் ஆதரியானூர் பகுதியில் உள்ள அச்சங்குளம் கள்ளத்திகுளம் பகுதியில் மீன் பாசி குத்தகைக்கு எடுத்துள்ளார்.இவர் இரவு நேரத்தில் குளத்து கரையில் காவல் இருப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு காவலில் இருந்தபோது அங்கு வந்த மரப நபர்கள் அரிவாளால் பயங்கரமாக தாக்கி அவரது தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்த ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தகவல் அறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் பார்வையிட்டு பாதுகாப்பு பணிக்கு போலீசார் போடப்பட்டுள்ளனர்.போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சொத்து பிரச்சனை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.தொடர்ந்து குற்றவாளிகளை போலீசார் செல்போன் எண்களைக் கொண்டு தேடி வருகின்றனர். தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது .
Tags : ஆழ்வார்குறிச்சி அருகே ஒருவர் தலை துண்டித்து கொடூர கொலை