பாபா சித்திக் படுகொலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

by Staff / 13-10-2024 03:27:22pm
பாபா சித்திக் படுகொலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

பாபா சித்திக் படுகொலை சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது X தள பக்கத்தில், "தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) தலைவர் பாபா சித்திக் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். குடிமைச் சமூகத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்களுக்கு இடமில்லை. இவை கடும் கண்டனத்துக்குரியவை ஆகும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via