கத்தாரில் முட்டைக்கு பெரும் தட்டுப்பாடு
FIFA உலகக் கோப்பை 2022 காரணமாக கத்தாரில் முட்டையின் தேவை அதிகரித்ததால், தமிழகத்தில் இருந்து முட்டை ஏற்றுமதி இரட்டிப்பாகியுள்ளது. இதனால், கேரளாவிற்கு முட்டை வரத்து வெகுவாக குறைந்துள்ளதால், விலை உயர்ந்துள்ளது. முட்டை விலை, 5 ரூபாயில் இருந்து, 6 - 6.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. சில மளிகை கடைகளில், முட்டைகள் கிடைப்பதில்லை.
தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணைகளின் தகவல்களின்படி, உலகக் கோப்பை போட்டி தொடங்கியதில் இருந்து கத்தாருக்கான முட்டை ஏற்றுமதி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இருந்து மட்டும் கத்தாருக்கு 20 முதல் 25 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
“கேரளாவுக்கு, தமிழகத்தில் இருந்து மொத்தம் 1.40 கோடி முட்டைகள் வருகின்றன. மாநிலத்திலும் சுமார் 40 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன” என்று கேரள விலங்குகள் நலத் துறை உதவி இயக்குநர் டாக்டர் டி ஷைன் குமார் தெரிவித்தார்.
“ஏற்றுமதி அதிகரித்து வரத்து குறையும் போது, இயற்கையாகவே விலை உயரும். தமிழகத்தில் இருந்து புல்லட், மீடியம், லார்ஜ் என மூன்று வகையான முட்டைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. கேரளாவில் அனைத்தும் கலந்து ஒரே விலைக்கு விற்கப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
Tags :