ரெயில்வே வாரிய தலைவருடன் விஜய் வசந்த் எம். பி. சந்திப்பு.

by Staff / 26-11-2022 01:55:04pm
ரெயில்வே வாரிய தலைவருடன் விஜய் வசந்த் எம். பி. சந்திப்பு.

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், புதுடெல்லியில் ரயில்வே போர்டு தலைவர் வினய் குமார் திரிபாதியை சந்தித்தார். அப்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்வே உட்கட்டமைப்பு பணிகள் குறித்தும், புது ரயில்கள் குறித்தும் ரயில் நிலையங்களின் மேம்பாடு குறித்தும் கோரிக்கைகள் முன் வைத்தார். குழித்துறை ரயில் நிலையத்தை வாகனங்கள் கடக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் எனவும், இரணியல் ரயில் நிலையம் செல்வதற்கான புதிய இணைப்பு சாலை அமைத்து தர வேண்டும் எனவும், நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி பயணிகளுக்கு உதவும் வரையில் நிலையத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும் பள்ளியாடி ரயில் நிலைய கட்டடத்தை புதுப்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். கன்னியாகுமரி மக்கள் வேளாங்கண்ணி செல்வதற்காக வாராந்திர ரயில், சென்னை தாம்பரத்திற்கு நாகர்கோவிலில் இருந்து தினசரி ரயில், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மற்றும் மதுரை புனலூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களுக்கு குமரி மாவட்டத்தில் அதிக நிறுத்தங்கள் தேவை என்பதையும் கோரிக்கையாக முன் வைத்தார்.

 

Tags :

Share via

More stories

Logo