ரூ.9 கோடி இழப்பீடு.. ரவி மோகன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி

சென்னை: பட தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் தொடர்ந்த வழக்கில், தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்தப்படி குறித்த காலத்தில் படப்பிடிப்பை தொடங்காததால், இழப்பு ஏற்பட்டுள்ளதாக நடிகர் ரவி மோகன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்த மனு மீது பாபி டச் கோல்ட் யுனிவர்சல் நிறுவனம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags :